இந்தியாவின் சிறப்பு படைகளுக்கு அதிநவீன துப்பாக்கிகள்,வெடி குண்டுகள் மற்றும் பாராசூட்களை வாங்க உள்ள இந்திய பாதுகாப்புத் துறை

இந்தியாவின் சிறப்பு படைகளுக்கு அதிநவீன துப்பாக்கிகள்,வெடி குண்டுகள் மற்றும் பாராசூட்களை வாங்க உள்ள இந்திய பாதுகாப்புத் துறை.

ஏற்கனவே தீவிரவாதிகளை ஒடுக்க இந்திய பாதுகாப்பு படைகள் அமெரிக்காவின் M4A1 ரக துப்பாக்கிகளை பயன்படுத்தி வருகிறது.

பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அவர்கள் கலந்து கொண்டு நடத்திய உயர் மட்ட ஆலோசனை கூட்டத்தில் இந்தியாவின் சிறப்பு படைகளை மேலும் வலிமை படுத்த அதிநவீன துப்பாக்கிகள் வாங்க அனுமதி அளித்து உள்ளார்.

ஏற்கனவே இந்தியாவின் சிறப்பு பாதுகாப்பு படை என்று அழைக்கப்படும் Special Protection Group (SPG) இந்திய பிரதமர்களை பாதுகாத்து வருகிறது.தற்போது SPG படை பெல்ஜியத்தில் இருந்து வாங்கப்பட்ட துப்பாக்கிகளை பயன்படுத்தி வருகிறது.அதே மாதிரி சில சிறப்பு அம்சங்களை கொண்ட துப்பாக்கிகளை முப்படைகளின் Special Forces க்கு வாங்க இந்திய பாதுகாப்புத் துறை அனுமதி அளித்துள்ளது.

ஏற்கனவே கடந்த பிப்ரவரியில் இந்திய அரசு 72400 7.6 MM Sig Sauer ரக துப்பாக்கிகளை வாங்க 700 கோடியில் ஒப்பந்தம் போட்டது.தற்போது மேலும் படைகளை நவீனப்படுத்த துப்பாக்கிகள் மற்றும் இதர ஆயுதங்கள் 1000 கோடியில் வாங்கப்பட உள்ளன.

அந்த 700 கோடி ஒப்பந்தப்படி ஒரு வருடத்திற்குள் துப்பாக்கிகள் இந்தியாவை வந்து சேரும்.அதன்படி இந்திய இராணுவம் 66,400 துப்பாக்கிகளை பெறும். இந்திய விமானப்படை மற்றும் இந்திய கடற்படை முறையே 4000 மற்றும் 2000 துப்பாக்கிகளை பெறும்.

முப்படைகளின் சிறப்பு படைகளை மேலும் பலப்படுத்த தற்போது 1000 கோடியில் ஒப்பந்தம் போடப்பட உள்ளது..

🇮🇳ஜெய்ஹிந்த்🇮🇳
🇮🇳வந்தே மாதரம்🇮🇳

3 thoughts on “இந்தியாவின் சிறப்பு படைகளுக்கு அதிநவீன துப்பாக்கிகள்,வெடி குண்டுகள் மற்றும் பாராசூட்களை வாங்க உள்ள இந்திய பாதுகாப்புத் துறை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *