கேப்டன் காலியா

கேப்டன் காலியா

இந்தியர்கள் அனைவருமே அவரது குடும்பத்திற்கு துரோகம் செய்து விட்டோம் என்று தான் கூற வேண்டும்.தமிழத்தில் முக்கால்வாசி நபர்களுக்கு இவர்கள் யார் என்று கூட தெரியவில்லை.

ஆனால் நமது வீரர்கள் இவரைப் போன்றவர்களின் தியாகத்தை மறக்கமாட்டார்கள்.அவர்கள் அடிபட்ட கழுகைப் போல பழிவாங்க காத்திருப்பர்.சில சமயம் உயர் அதிகாரிகளுக்கு கூட தெரியாமல் நமது வீரர்கள் பழிதீர்ப்பர்.பல சமயங்களில் இந்த விசயங்கள் யாருக்கும் தெரியாது.ஆனால் ஒரு சில விசயங்கள் வெளியே தெரிந்துவிடும்.எனது நண்பர் இது மாதிரியான ஒரு சம்பவத்தை என்னிடம் கூறினார்.அதைப் பிறகு ஒரு நாள் கூறுகிறேன். தற்போது அதே போல் ஒரு சம்பவம் வெளிவந்துள்ளது. பாக் எல்லைக்குள் புகுந்து ஒரு நிலையை நமது வீரர்கள் துவம்சம் செய்த நிகழ்வு.

வீரர் கேப்டன் காலியா மற்றும் அவரது சக வீரர்களை கொடூரமாக கொன்றதற்கு பாக் மன்னிப்பு கேட்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் அவர்கள் கேட்கவில்லை.சில பாக் பொட்டை இராணுவ வீரர்கள் காலியாவை கொன்றதை டீவி நிகழ்ச்சியில் பெருமையாக பேசியும் வந்துள்ளனர்.இது நம்மை (அல்லது என்னை ) வெகுவாக பாதித்துள்ளது.

அரசுகளும் (எல்லோரும் தான்), சில உயரிய இராணுவ அதிகாரிகளும் வீரர்களுக்கு பாக் செய்யும் கொடுமைகளுக்கு (தலை  வெட்டுவது போன்றவை)செவி சாய்க்காமல் இருக்கலாம் (சர்ஜிகல் தாக்குதல் முன்பு வரை இதே நிலை தான்) ..ஆனால் வீரர்கள் ஒரு கண்ணுக்கு 10 கண் என வெறி கொள்பவர்கள்.தனது சகாக்களின் இழப்பு அவர்களுக்கு குருட்டு தனமான கோபம் மட்டுமல்ல,பல மடங்கு பழிவாங்கும் உணர்ச்சியையும் தூண்டும்.இதனால் தூண்டப்படும் வீரர்கள் அரசோ உயரதிகாரிகள் அனுமதியில்லாமல் கூட எல்லை தாண்டி தாக்குவதுண்டு.சில சமயங்களில் உயரதிகாரிகளும் ஆதரவளிப்பர்.

அப்படியான எல்லைத் தாக்குதல் ஒன்றை காணலாம்.

முதல் மற்றும் மூன்றாம் சிறப்பு படையில் இருந்து இரண்டு வீரர்களும்,10வது சிறப்பு படையில் இருந்து மூன்று வீரர்களும் இணைந்து எல்லை தாண்டி பாக் நிலையை தாக்கிய சம்பவம்.பாக்கின் எல்லைப்புற நிலை அது.அது ஒரு எதிர்பாராத ரெய்டு.கிட்டத்தட்ட 22 பாக் வீரர்களை கொன்றனர்.மற்ற சமயங்களில் எந்த தடயமும் இல்லாமல் செய்யும் வீரர்கள் இந்த முறை ஒரு செயலை செய்தனர்.இறந்த பாக் வீரரின் இரத்தத்தை எடுத்து ஒரு எச்சரிக்கையை எழுதி வைத்து விட்டு வந்தனர்.

இது இப்படியாக உள்ளது ” நாங்கள் வேட்டையாடுபவர்கள்.நீங்கள் தான் எங்கள் இரை.நீங்கள் எஙகளுக்கு ஒன்றுமல்ல ” என்று எழுதியிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *