போர்விமானங்கள்,நீர்மூழ்கி மற்றும் துப்பாக்கிகள் : முப்படைகளின் பெரிய லிஸ்ட்

போர்விமானங்கள்,நீர்மூழ்கி மற்றும் துப்பாக்கிகள் : முப்படைகளின் பெரிய லிஸ்ட்

பாகிஸ்தான் மற்றும் சீனாவிற்கு எதிராக ஒரு சக்திமிக்க படையை கட்டமைக்க வேண்டிய நேரமிது.சிறிய அதே நேரம் தேர்ந்த சக்தியுடைய படையாக இருத்தல் அவசியம்.இதை நோக்கியான நமது பயணம் அமைய வேண்டும்…புதிய சக்திமிக்க ஆயுதங்களை நாம் வாங்கும் அதே நேரத்தில் பழைய அல்லது நடுத்தர வயதுள்ள ஆயுதங்களின் தரத்தையும் மெருகேற்றி கொள்ள வேண்டும்.

இந்தியக் கடற்படை புதிய நீர்மூழ்கிகள் மற்றும் தனது விமானம் தாங்கி கப்பலுக்கு புதிய விமானங்கள் வாங்கும் தருணத்தில் இந்திய விமானப்படையோ தனக்கு 114 விமானங்களுக்கான ஒப்பந்தத்தை இந்த வருட இறுதியில் முடிக்கலாம் என்ற நிலையில் உள்ளது.

அதே நேரத்தில் இந்திய இராணுவத்திற்கு புதிய advanced Infantry Combat Vehicle (ICV) தேவையாக உள்ளது.போரின் போது வீரர்களை வேகமாக நகர்த்த இந்த வாகனங்கள் உதவும்.இந்திய இராணுவத்தில் தற்போது 1200
Russian BMP armoured வாகனங்கள் உள்ளன.இவை பழையவை. 1980 களில் இந்த வாகனங்கள் வாங்கப்பட்டன.கடந்த பத்து வருடங்களாக இந்திய இராணுவம் புதிய அடுத்த தலைமுறை கவச வாகனங்களை படையில் இணைக்க போராடுகிறது.

மேலும் படைகளுக்கு புதிய 3.5 லட்சம் துப்பாக்கிகளும், 36,000 light machine guns (இலகுரக இயந்திர துப்பாக்கிகள்) தேவையாக உள்ளது.42 ஸ்குவாட்ரான் பலம் நமது விமானப்படைக்கு தேவையாக உள்ளது.

36 ரபேல் மட்டுமே ஆர்டரில் உள்ளது.இந்த வருடத்தின் இறுதிக்குள் 114 விமானங்கள் ஒப்பந்தம் கையெழுத்தானால் நல்லது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *