
இந்தியாவில் தேர்தல் திருவிழா: அணுசக்தி ஏவுகணை சோதனை செய்த பாகிஸ்தான்
இந்தியாவில் தேர்தல் தொடர்பான இறுதி அறிக்கை வெளியாகியிருக்கும் இந்நேரத்தில் பாகிஸ்தான் தனது சஹீன் 2 பலிஸ்டிக் ஏவுகணையை சோதனை செய்துள்ளது.
தரை-தரை இலக்குகளை தாக்க வல்ல இந்த ஏவுகணையை வெற்றிகரமாக பாகிஸ்தான் சோதனை செய்துள்ளதாக கூறியுள்ளார்.
இந்தியாவுடன் அமைதி தொடர்பான பேச்சுவார்த்தை நடத்த தயார் என கூறிய அடுத்த நாளே பாகிஸ்தான் இந்த சோதனையை நடத்தியுள்ளது.அணு மற்றும் மாற்றத்தக்க வெடிபொருள்களை சுமந்து 1500கிமீ வரை செல்லக்கூடியது.
பாகிஸ்தானின் Army Strategic Forces Commad-ன் தயார் நிலையை இந்த சோதனை குறிப்பதாக பாகிஸ்தான் கூறியுள்ளது.
இந்தியா இந்த சோதனை குறித்து எந்த செய்தியும் கூறவில்லை…